2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்காவிலிருந்து வந்த “குஷ்” போதைப்பொள்

Freelancer   / 2022 டிசெம்பர் 25 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதான நபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என குறிப்பிட்டனர்.

குறித்த பொதியில் குஷ் ரக போதைப்பொருள் 1.367 கிலோகிராம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X