Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 மே 13 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 44 சதவீத வரிகள் அமுலுக்கு வருமாக இருந்தால், முக்கிய ஏற்றுமதித் துறைகளில் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கைப் பெண்கள் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழப்பார்கள் என்று ஆசியா நியூஸ் (ANN) தெரிவித்துள்ளது.
அமெரிக்க சந்தை மிகவும் இலாபகரமான சந்தைகளில் ஒன்றாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களைப் பணியமர்த்தும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழில்களான ஆடை, தேயிலை, இரத்தினக் கற்கள், றப்பர் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை புதிய வரிகளால் அதிகம் பாதிக்கப்படும்.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதத்தை ஆடைத் தொழில் கொண்டுள்ளது.
இத் தொழில் முக்கியமாக கிராமப்புறங்களில் குறைந்த வருமானம் கொண்ட பின்னணியைச் சேர்ந்த பெண்களைப் பணியமர்த்துகிறது.
இந்த வேலைகள் வறுமையிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு முக்கியமான பாதையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
"பெண் தொழிலாளர்களுக்கு இடையூறாக இருக்கும் அமெரிக்க வரிகளுக்கு எதிரான எங்கள் பிரசாரத்தை மேற்கொள்ள மகளிர் மையம் 25 பிற மகளிர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளது," என்று அதன் நிர்வாக இயக்குனர் பத்மினி வீரசூரியா கூறினார்.
கட்டணங்கள் நடைமுறைக்கு வந்தால், "அவர்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம் கணிசமாகக் குறையும்," என்று அவர் மேலும் கூறினார்.
அத்துடன், "ஆர்டர்கள் குறைந்து, சுமார் ஆறு மில்லியன் சார்ந்திருப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தேவை குறைய வாய்ப்புள்ளதால், தொழிற்சாலைகள் ஏற்கெனவே தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது குறித்து விவாதித்து வருகின்றது.
இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் ஒப்பிடும்போது, இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகள் அதிகமாக உள்ளன. அதனால் இலங்கை பெண்கள் அதிக போட்டியை எதிர்கொள்கின்றனர்.
ஆலைகள் மூடப்பட்டால், பணிபுரியும் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.
புதிய வரி விதிப்பு அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை 20 சதவீதம் குறைக்கும், வெளிநாட்டு நாணய வருவாயில் ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த பொருட்களின் ஏற்றுமதி 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதால், இது "நாட்டின் வர்த்தக சமநிலைக்கு ஒரு பெரிய அடி" மற்றும் "பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளுக்கு" ஒரு பெரிய அடியாகும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago