2025 மே 01, வியாழக்கிழமை

அமைச்சரவைக்கு வாசு ’அப்சென்ட்’

Freelancer   / 2022 மார்ச் 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சுக் கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சு கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் இவ்விடயத்தை அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .