2021 மே 07, வெள்ளிக்கிழமை

அமைச்சரவை உப குழு நியமனம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் பெண்களின், குடும்பப் பின்னணி அறிக்கையை பெற்றுக் கொள்ளும் விடயம் தொடர்பில், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மீண்டும் ஆராயம் வகையில், அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (21), இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தி​ன் போதே, அமைச்சரவை  உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான, பேராசிரியர் சரத் அமுனுகம, விஜயதாச ராஜபக்ஷ, தலதா அத்துகோரல மற்றும் சந்ராணி பண்டார ஆகியோர், இவ் உப குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் பெண்கள் வெளிநாடு செல்லும் போது, அவர்களின் குடும்பப் பின்னணி அறிக்கையை பெற்றுக் கொள்ள எடுத்த தீர்மானத்தை நீக்குமாறு, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியே,  அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X