Editorial / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (31) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
ஊடகங்களுக்கு தேரர் வழங்கிய செவ்வியை இறுவட்டில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான் வழக்கை எதிர்வரும் 20 ம் திகதி வழக்கு ஒத்திவைத்துள்ளார்.
குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை கடந்த 25ம் திகதி புதன்கிழமை மறித்து , தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்து தமிழர்களை மிக வேதனைபடும் அளவிற்கு துஷணவார்த்தைகளை பிரயோகித்து சத்தமிட்டார்.
தமிழ்-சிங்கள மக்களிடையே பாரிய இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளது.இன முரண்பாட்டை தோற்றுவிக்க தேரர் முயற்சித்ததுடன் தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இந்த தேரரின் செயற்பாட்டை கண்டித்தது அவருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (27) முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் தொடர் விசாரணையின் பின்னர் தேரருக்கு எதிராக முறைப்பாட்டின் பிரதிவாதியாக மோகனை குறிப்பிட்டு தேரருக்கு எதிராக இன்று (31) மனுத் தாக்கல் செய்தனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் மனுவை விசரணைக்கு எடுத்து ஊடகங்களுக்கு தேரர் வழங்கிய செவியை இறுவட்டுக்களில் பதிவு செய்து 20 ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ம் திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
18 minute ago
44 minute ago
45 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
45 minute ago
56 minute ago