2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அமைச்சரவையில் மாற்றம் இல்லை

Thipaan   / 2016 ஜனவரி 06 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்த வருடத்தில், அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவிருக்கின்ற கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இவ்வருடத்துக்குள் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படாமல் இருப்பது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X