2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க பெரஷூட் வீரர் கொழும்பு தென்னைமரத்தில்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கட்டடத்திலிருந்து பெரஷூட்டில் (வான்குடை) குதித்த அமெரிக்கப் பிரஜையொருவர், தென்னைமரமொன்றில் சிக்கியிருந்த நிலையில், கொழும்பு தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவரது பெரஷூட், முதலில் மின்சாரக் கோபுரமொன்றில் மோதியே, பின்னர் தென்னை மரத்தில் சிக்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னரும், கொழும்பு உலக வர்த்தகமையக் கட்டடத்திலிருந்து பெரஷூட்டில் குதித்த அவுஸ்திரேலியப் பிரஜையொருவர், கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் வாகனத் தரிப்பிடத்தில் விழுந்து காயமடைந்தார்.

இந்நிலையிலேயே, அமெரிக்கர் ஒருவரும் தென்னைமரத்தில் சிக்கியிருந்த நிலையில் இன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X