Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையினால், சர்வதேச சமுகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் சர்வதேச நீதிபதிகளும் பங்கேற்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று ரணில் தெரிவித்தார்.
எனவே, இந்த யோசனைக்கு அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கமும் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உரிய அரசியல் அமைப்;பு மாற்றங்களை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் கூறினார்.
நேற்றைய திட்டவரைபு
இலங்கை தொடர்பிலான நேற்று ஆற்றுப்படுத்தப்பட்ட நேற்றைய திட்ட வரைவில் எதிர்பார்த்ததை விட சில சரத்துக்கள் வித்தியாசமான முறையில் மாற்றி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கலப்பு நீதி மன்றம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதம் விஷேட சபை என மாற்றப்பட்டதுடன் அதனை விசாரிக்கும் நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வரைவு எதிர்வரும் 30 ஆம் திகதி சபையின் விவாதிக்கப்படும்போது மேலும் ஒரு சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், கலப்பு நீதிமன்றம் என்னும் சொற்பதம் நீக்கப்பட்டமையானது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago