Freelancer / 2026 ஜனவரி 01 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது, அந்தப் பெண் குறித்த நபரின் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான பெண்ணை நேற்றைய தினம் (31) சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago