Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியினர் மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கின் நான்காவது அமர்வு சர்வதேச சமாதான தினமாகிய 21.09.2025 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வித்தியாசமான அம்சங்களும் இடம் பெறவுள்ளன.
சுயாதீன ஊடகவியலாளரும் கவிதாயினியுமாகிய திருமதி மேரி ஸ்ரேலா இந்த அமர்வுக்கு தலைமை ஏற்கிறார்.
முற்றிலும் இளங்கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கி -வெகு விரைவில் திரையிடப் படவுள்ள "சனாதனனின் மெளனமொழி " என்ற முழுநீளத் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் முன்னோட்ட நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஹைக்கூ கவிபாட விரும்பும் ஆர்வலர்கள் உடன் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .