2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’அரசமைப்பின் பிரகாரம் செயற்படவும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரமைப்பின் பிரகாரம், இலங்கையின்  சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் ஆகியோர், இலங்கையின் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில, அரசமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும், அசம்பாவிதங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன், பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்துக்கு  மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .