2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

’’அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்’’

Simrith   / 2025 பெப்ரவரி 04 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார்.

77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது பேசிய  கர்தினால் ரஞ்சித், புதிய அரசியலமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் ரத்து செய்தல் மற்றும் அதிகாரம் சலுகைகளை அனுபவிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

"தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவிக்காமல் தேசத்திற்கு சேவை செய்ய தேசத் தலைவரை சட்டப்பூர்வமாகக் கடமைப்படுத்தும் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X