Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களுக்கானத் தீர்வை இலங்கை அரசாங்கத்தால் மாத்திரமே வழங்க முடியுமெனத் தெரிவித்துள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதித் தேர்தலின்போது கூட்டமைப்பின் முடிவால், முழு தமிழ் சமுகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடமராட்சி இளையோருடனானக் கலந்துரையாடலில் இன்று(07) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதில்லை எனவும், முன்னாள் எம்.பி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கும் தமிழ் அரசியற் கட்சிகள் எடுத்த முடிவு மாபெரும் தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியற் கட்சிகளின் இந்த முடிவால், சிங்கள மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. சஜித்தின் தோல்வி தமிழ் அரசியற் கட்சிகளும் ஒரு காரணமாகும்.
ஆராய்ந்துப் பார்க்காது கூட்டமைப்பு இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்திருந்தமையால், முழு தமிழ் சமுகமும் பாதிப்புக்குள்ளானது.
தமிழர்களின் நிலை என்ன? நாமும் அடிவருடிகளாக பெரும்பான்மை கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு ஒன்று இரண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு அரசின் தாளத்திற்கு ஆடப்போகின்றோமா அல்லது இந்த முறை பார்ப்போம். அடுத்த முறை பார்ப்போம் என்று காலத்தை விரயம் செய்யப் போகின்றோமா? இதுத் தொடர்பில் எந்தவிதமான தெளிவும் எமக்கு இல்லை.
தமிழ் மக்களுக்கான தீர்வை இலங்கை அரசாங்கத்தால் மாத்திரமே வழங்க முடியும். ஆனால் அந்தத் தீர்வு வலியவந்து கிடைக்காதெனவும், வலிந்து பெறப்பட வேண்டமெனவும் தெரிவித்துள்ளார்.
பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அவ்வாறானதொரு தீர்வு கிடைக்கப்பெறலாம். எனவே எமது அரசியல் முன்னெடுப்புக்கள் வெளிநாடுகளின் பார்வையை எமது பக்கம் ஈர்ப்பதாக இருக்கவேண்டும்.
எனவே தொடர்ந்து அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காது, சர்வதேசத்துக்கு எமது பிரச்சினைகளைக் கொண்டுச் சென்று அவர்களுடனான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றார்.
தமிழ் மக்களின் அமோக அதரவைப் பெற்று கூட்டமைப்புக் கட்சிகள் உருவாகின. ஆனால் அவர்களின் போக்கு தமிழ் மக்களின் நலன் சார்ந்து அமையவில்லை எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
5 hours ago