2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’அரசாங்க மாற்றம் பற்றி கருத்து கூற முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மாற்றம் மற்றும் அரசாங்க மாற்றம் தொடர்பிலான சட்ட அந்தஸ்து தொடர்பில் கருத்துக் கூறமுடியாது என, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கருஜயசூரியவின் கவனத்துக்கு, நேற்று (31) கொண்டுவந்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பிலான சட்டரீதியான நிலைமை​ தொடர்பில், தெளிவுப்படுத்துமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபருக்கு, கடந்த 27ஆம் திகதியன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அக்கடித்துக்கான பதில் கடிதத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசமைப்பின் பிரகாரம், சட்டமா அதிபரின் வகிபாகத்துக்கு அமைவாக, அதுதொடர்பில் கருத்துக் கூறுவது பொருத்தமானது அல்ல என்பதே தன்னுடைய கருத்தாகுமென, அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .