2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் கைதிகளை யாழ் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிரமலநாதன் தெரிவித்தார்.

அவர் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று சனிக்கிழமை (21) மாலை இடம் பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து குறித்த சிறைச்சாலையில் உள்ள   அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(22) காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தேன்.

அரசியல் கைதிகளின்   பாதுகாப்பு தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகருடன் கலந்துரையாடினேன்.

இதன் போது சிறைச்சாலையில் உள்ள 11 அரசியல் கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் பாதுகாப்பு இல்லை என்றால் உடனடியாக மகசின் சிறைச்சாலைக்கோ அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கோ குறித்த அரசியல் கைதிகளை மாற்றும் படி கேட்டுக்கொண்டேன்.

அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவும் பாரதூரமான நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

உலகம் பூராகவும் கொரோனா தொற்றின் காராணமாக சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலை ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடி 11 அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக விளங்கப்படுத்தி அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

உடனடியாக 11 தமிழ் அரசியல் கைதிகளையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .