Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதாக, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் "தி ஹிந்து" ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவித்த, த.தே.கூவின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென்ற தமது கொள்கையில் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியமை, அதன் பின்னர், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை ஆகியவற்றை, "தேசிய அரசாங்கம் என்ற எண்ணத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்" என, அவர் வர்ணித்தார்.
தேசிய அரசாங்கம், அதன் முழு ஆட்சிக் காலத்துக்கும், அதைத் தாண்டியும் தொடர வேண்டும் என்பதே, கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது என, அவர் தெரிவித்தார்.
மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தின் மீது, நம்பிக்கை வாக்கெடுப்பொன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட த.தே.கூ எவ்வாறு வாக்களிக்கும் எனக் கேட்கப்பட்ட போது, "நாட்டின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இரண்டு கட்சிகளும் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என்ற, எமது கொள்கைகயின் அடிப்படையில் நாம் செயற்படுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை" என அவர் பதிலளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago