Janu / 2026 மே 20 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களாக அரச சேவையின் சம்பள அதிகரிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பெரிய அளவிலான பிரச்சினைகள் பல உள்ளதாகக் கூறினார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் பேசுகையில்:
"எமக்கு ஒரு வலுவான அரச சேவை அவசியமாகும். எமது பொலிஸார், முப்படையினர் மற்றும் அரசாங்க அதிபர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை உள்ளடங்கிய ஒரு பலமிக்க அரச சேவை எமக்குத் தேவைப்படுகிறது. அதற்காகவே நாம் தற்போது பணியாற்றி வருகின்றோம். அரச சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்பும் வகையில், அதற்குரிய புதிய நியமனங்களும் (இணைப்புகளும்) வழங்கப்படும்."
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற, போதைப்பொருள் ஒழிப்புக்கான "நாடே ஒன்றாக" மட்டக்களப்பு மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

20 minute ago
36 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
1 hours ago
4 hours ago