Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழு நாடாளுமன்றமுமே, புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான தெரிவுக்குழுவாக மாற்றப்படுமென, அரசியலமைப்புச் செயற்குழுவின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜயம்பதி விக்கிரமரத்ன, ஏனைய தெரிவுக்குழுக்கள் போல, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்காமல், முழு நாடாளுமன்றமுமே அங்கம் வகிக்கும் தெரிவுக்குழுவாக இது அமைக்கப்படுமெனத் தெரிவித்தார்.
அத்தோடு, இந்தத் தெரிவுக்குழுவின் அனைத்து அமர்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படுமென்பதோடு, அவற்றை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுமெனவும், அனைத்து அமர்வுகளும் நாடாளுமன்றப் பதிவேட்டில் (ஹன்சார்ட்) பதிவு செய்யப்படுமெனவும் குறிப்பிட்டார்.
இந்தத் தெரிவுக்குழுவில் வரையப்படும் அரசியலமைப்பு, அமைச்சரவையின் அங்கிகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், அதன் பின்னர், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமெனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, வரைவு அரசியலமைப்பு, மக்களின் அனுமதியைப் பெறுவதற்காக, சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்படுமெனவும் தெரிவித்தார்.
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago