Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் கருத்துச் சொல்ல விரும்புவர்களுக்கு, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழு சந்தர்ப்பமளித்துள்ளது. சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான 20 பேரடங்கிய குழுவே இவ்வாறு சந்தர்ப்பமளித்துள்ளது.
www.yourconstitution.lk என்ற இணைத்தளத்தின் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பொருட்களுக்கு அமைவாக, தங்களுடைய யோசனைகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ முன்வைக்கலாம் என்றும் அக்குழு அறிவித்துள்ளது.
குழுவின் கூட்டத்தின் போது நேரடியாகப் பங்குபற்றிக் கருத்துகளைத் தெரிவிக்கவிரும்புவோர், முற்கூட்டியே பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும் அக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தபால் மூலமாக அனுப்பிவைக்க விரும்புவோர், தலைவர், அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பிலான மக்கள் கருத்தறியும் குழு, செயலாளர் காரியாலயம், விசும்பாய, கொழும்பு-02 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். அல்லது கீழுள்ள வழிகளூடாக அனுப்பிவைக்கலாம்.
தொலைபேசி- (011) 243 7676
தொலைநகல் - (011) 232 8780
மின்னஞ்சல் - constitutionalreforms@gmail.com
மக்கள் மற்றும் பொது அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் யோசனைகள், இது தொடர்பிலான உப-குழுவிடம் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையாகக் கையளிக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
42 minute ago
56 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
56 minute ago
58 minute ago