2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அர்ஜுன் அலோஷியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெபச்சுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோஷியஸ் திடீர் நோய்வாய்ப்பட்டதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜுன் அலோஷியஸுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று அவர் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் அவரை பொரல்லையில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .