2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

அழகான பெண்களின் படங்களை ஏற்றிய டொப்பியாவுக்கு சிறை

Editorial   / 2025 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகான பெண்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, ஆபாசக் கதைகளைப் பரப்பிய யூடியூப் சேனலை நடத்தியதற்காக கடுவெல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க வியாழக்கிழமை (31) விதித்தார். குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக இருந்த திமுத்து சாமர (டோபியா) என்ற நபருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்புப் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது. ஆபாசக் கதைகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனலில் தனது புகைப்படம் ஒளிபரப்பப்படுவதாக ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X