2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது: மாவை

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாதென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அவ்வாறு முடிவுகளைச் சொல்வது பொருத்தமில்லையென்பதால், அந்த நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

“ஆனாலும், கலந்துபேசி ஒரு தீர்மானம் எடுத்து, எங்களுடைய முடிவுகளை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேம்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .