Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 06 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடன் கைது செய்யுமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையையே, நடைமுறைப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார்.
அவன் கார்ட் நிறுவனத்துக்க, மிதக்கும் ஆயுதக் கப்பலை நடத்திச்செல்ல அனுமதி வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கின் அடிப்படையில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறுகோரி, ஐந்து பேர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்தபோதும், அந்த மனுக்களை, நீதியரசர்கள் குழாம் நிராகரித்திருந்தது.
இதற்கமைய, எவன் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்குடன் தொடர்புடைய, சந்தேகத்துக்குரிய ஐவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு எவ்வித சட்ட ரீதியான தடையும் இல்லை என சட்டமா அதிபரால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .