2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் - ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று  (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

 தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் போல் ஸ்டீபன்ஸின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

மேலும், கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய இராஜதந்திரிகள் பலர் இந்நாட்டிற்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உயர் ஸ்தானிகர் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .