2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அவை ஒத்திவைப்பு

Thipaan   / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரவு- செலவுத்திட்டம் தொடர்பில், அரசாங்கம் இரண்டு புத்தகங்களை சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்தே அவையில் அமளி துமளி ஏற்பட்டது.

எதிரணியினர் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பியமையால் சபாநாயகர் கரு ஜயசூரிய அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த போது நிதியமைச்சரால் ஒரு புத்தகம் ஆற்றுப்படுத்தப்பட்டது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளில் இன்று திங்கட்கிழமை மற்றுமொரு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.  இதில் எது சரியான புத்தகம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா அநுர குமார திசாநாயக்க, அவையில் ஆற்றுப்படுத்தப்பட்ட புத்தகத்துக்கும் மேசையில் வைக்கப்பட்டுள்ளது புத்தகத்துக்கும் இடையில் உள்ளடக்கத்தில் வித்தியாசம் காணப்படுவதாக  சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டுமெனக்கோரி, அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .