Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜூலை 02 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது.
தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், கிராம உத்தியோகத்தர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் காரியாலய அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் (www.wbb.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் போது வழங்கப்பட்ட தகவல்களில் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக கருதும் விண்ணப்பதாரர்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற தகுதியான பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத நபர்கள் ஆகியோர் இதற்கான மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.
மேல்முறையீட்டாளர்கள்/ ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு பிரவேசித்து, பின்னர் தங்களது மேல்முறையீடுகள்/ ஆட்சேபனைகளை இணையவழியாகவும் சமர்ப்பிக்கலாம். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
1 hours ago