Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மார்ச் 05 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தகவல்களைத் தேடுவதற்குப் பதிலாக, நீதிமன்ற அதிகாரத்தைக் கைக்கு எடுத்துள்ளதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ல க்ஷ்மன் கிரியெல்ல, இது சட்டவிரோத செயற்பாடு என்பதுடன் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகள் குறித்து, இந்த ஆணைக்குழு பரிந்துரைக்கிறது எனில், இது முழுமையாக நீதிமன்ற அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும் என்றார்.
நீதிமன்றத் தீரப்பை, நீதிமன்றங்களால் மாத்திரமே மாற்ற முடியுமெனத் தெரிவித்த அவர், இவ்வாறான ஆணைக்குழுக்களால் நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற முடியாது. இந்த ஆணைக்குழு அரசாங்கத்துக்கு சார்பானவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகளை நிறுத்தி, முறைப்பாட்டார்களைக் குற்றவாளிகளாக ஆக்கியுள்ளது என்றார்.
எனவேதான், 40 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இது தொடர்பான மனுவொன்றை பிரதம நீதியரசரிடம் கையளித்ததாகத் தெரிவித்த அவர், மக்களின் நீதிமன்ற அதிகாரங்கள், பாராளுமன்றத்தால் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே, நீதிமன்ற அதிகாரம் உரியமுறையில் செயற்படுகின்றதா என்பதைப் பார்ப்பதற்கு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நாம் நீதிமன்றங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை இந்த ஆணைக்குழு பறித்துள்ளது என்றார்.
சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம், இந்த ஆணைக்குழுவுக்கு இல்லையென்று சட்டமா அதிபர் இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பினார். எனவே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு, அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு, ஆகிய குழுக்களின் அறிக்கைகள்இ முழுமையற்ற அறிக்கைகளாகும் என்றார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago