2026 மே 05, செவ்வாய்க்கிழமை

ஆயிரம் ரூபாய் பிந்தும் அபாயம்?

Editorial   / 2021 மார்ச் 15 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நா​ளொன்றுக்கான அடிப்படை சம்பளமான ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 5ஆம் திகதி முதல் அந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலில் இருந்தாலும், இம்மாதத்துக்கான சம்பளத்துக்கு அதிகரித்த தொகையை சேர்த்துக்கொள்ள முடியாத நிலைமையொன்று ஏற்படுமென தோட்ட நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் ரூபாய்க்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்-மனு​க்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தி முடியும் வரையிலும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை  கோருவதற்கு மனுதார்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். அவ்வாறான இடைக்கால தடையுத்தரவு கிடைக்குமாயின் அதிகரிக்கப்பட்ட 1,000 ரூபாயை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .