2025 செப்டெம்பர் 12, வெள்ளிக்கிழமை

ஆரம்பமான இடத்துக்கே திரும்பினார் மஹிந்த

J.A. George   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷ, எல்லாம் ஆரம்பித்த கார்ல்டன் வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்று நாமல் ராஜபக்ஷ, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பிய நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“இன்று, எனது தந்தை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குத் திரும்பினார், அங்குதான் எல்லாம் தொடங்கியது. 

“உண்மையான பலம் பதவி, சலுகைகள் அல்லது பணத்திலிருந்து அல்ல, அது மக்களின் அன்பிலிருந்து வருகிறது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்” என,  அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .