2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் மோதல்:ஒருவர் காயம்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 
-மொஹமட் ஆஸிக்

ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள கண்டி-மஹியங்கனை வீதியை திறக்குமாறு கோரி கண்டி நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருக்கும் குறித்த வீதியை திறக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றபோது, இவ்வார்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இன்னொரு குழுவும் ஆர்ப்பாட்டக்குழுவுக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி நகர பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மோதலினால் கண்டி நகரில் போக்குவரத்து ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவத்தையடுத்து இந்த வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X