2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

’இசைஞானி இளையராஜா பெயரில் விருது’

Freelancer   / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

இதனையொட்டி நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்திருந்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .