Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு வருகைத்தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, இடமாறிச் சென்றதால் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்றது. இதில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோர் மாத்திரமே இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு வருகைத் தருவதற்கு பதிலாக அவர், நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு இடமாறிச் சென்றதால் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago