2025 மே 02, வெள்ளிக்கிழமை

இணையத்தளங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

நாடளாவிய ரீதியில் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்து, அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு, ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களின் பதிவுகளைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் ஊடக அமைச்சுக் கேட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.

இணையத்தளங்களை பதிவு செய்யும் நடைமுறை, 2012ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வருகின்றது. நாட்டில் இயங்கும் அனைத்து இணையத்தளங்களும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டு, அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு வருடமும் அப்பதிவு புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .