2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம்

J.A. George   / 2025 நவம்பர் 25 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (24) இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து உள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு அதே நாளில் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதாக பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இது இத்தாலிக்கான இலங்கை தூதருக்குத் தெரிவிக்கப்படுவதுடன், இத்தாலியில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்குப் பொறுப்பான நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த செயல்முறையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X