2021 மே 15, சனிக்கிழமை

’இந்தியாவின் பெயரை விற்று மேற்கு முனையத்தை விற்கின்றனர்’

Editorial   / 2021 மார்ச் 08 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் ஆழம், நீளம் கூடியதும் கிழக்கு முனையத்தை விடப் பெறுமதியானதென இந்தியாவின் பெயரை விற்று 'அதானி' நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அஜித்.பி.பெரேரா, 'அதானி' நிறுவனத்துக்கு மேற்கு முனையத்தை வழங்குமாறு தாம் கோரவில்லையென இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது என்றார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 
நேற்று (07)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததார்.

'எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்துக்கும் இதற்கான வாய்ப்பு வழங்காத நிலையில்இ இந்தியாவின் 'அதானி' நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, இந்திய அதிகாரிகள் எம்மைக் கட்டாயப்படுத்துகின்றனர். இந்தியாவை மகிழ்விக்க இந்த முனையத்தை வழங்க வேண்டுமெனத் தெரிவித்து, அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார். 

ஆனால், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை 'அதானி' நிறுவனத்துக்கு வழங்குமாறு தாம் கோரவில்லையென இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் ஊடகச் செயலாளர் அநுராத சிவதாஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார் எனத் தெரிவித்த அஜித்.பி. பெரேராஇ இலங்கை அரசாங்கத்தக்கும் குறித்த அதானி நிறுவனத்துக்கும் இடையிலான தனியான வர்த்தக உடன்படிக்கைக்கு அமையவே இது வழங்கப்படவுள்ளது. என்றார். 

துறைமுக அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் தவறானது என்பதைப் போல, அமைச்சவை பேச்சாளர் அமைச்சரவை முடிவுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்தும் தவறாகும் எனத் தெரிவித்த அவர், எனவே, இந்தியாவில் தற்போது பிரச்சினைக்குரிய நிறுவனமாகக் காணப்படும் 'அதானி' நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கத்தின் பெயரை விற்று, இலங்கையின் வளத்தை விற்கப் பார்க்கின்றனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .