2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்தியாவில் 170 ’ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் 170 மாவட்டங்கள் 'ஹாட்ஸ்பாட்' மாவட்டங்களாக, அதாவது கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும்; கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும் மாவட்டங்கள், அதிக தீவிரம் இல்லாமல் இருக்கும் மாவட்டங்கள், கொரோனா தொற்று இல்லாமல் இருக்கும் மாவட்டங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் இதுவரை சமூகப் பரவல் ஏற்படவில்லை என்றும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர், ஒரு மாவட்டத்தில் 15 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அது 'ஹாட்ஸ்பாட்' எனப்படுகிறது என்றார்.

அந்த கணக்குப்படி தமிழகத்தில், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட மொத்தம் 25 மாவட்டங்களில் 15 நபர்களுக்கும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 10,197 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்றும், 1343 பேர் குணமடைந்துவிட்டனர் என்றும், 392 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X