Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2025 மே 12 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த உடன்பாட்டை வரவேற்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானமானது இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்லாது, நிலையான அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய முன்னெடுப்பு எனவும் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தோட்டாக்களுக்கு பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குத் தீர்மானித்திருப்பது தங்கள் அறிவு ஞானத்தையும் இராஜதந்திரத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நெருங்கிய அண்டை நாடாகவும், நண்பராகவும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய படியாக இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்கும் என இலங்கை நம்புகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு எமது ஆதரவை வழங்குவதோடு எமது காலப்பகுதியிலேயே பிராந்திய அமைதியை அடைவதற்குத் தேவையான எந்தவொரு பங்களிப்பையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
3 hours ago