Freelancer / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 'டித்வா' சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்காக ஜீவன் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், அனர்த்ததினால் மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்துள்ளார். (a)

22 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago