Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 28 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருக்கோணேஸ்வரம் கோவிலில் எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறவில்லையென, கோவில் நம்பிக்கை பொறுப்பு சபையின் தலைவர் க. அருள் சுப்பிரமணியம் தெரிவித்தார். அத்துடன், இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று (28) காலை கோவில் சிலை மற்றும் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.
இதனையடுத்து, அதிகாலை முதல் தொலைபேசி மூலம் பலர் அழைத்து கோவில் கலசம் மற்றும் சிலைகள் உடைந்து விழுந்ததா எனக் கேட்டனர். அவ்வாறு எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பதை அறிவித்தோம் என்றார்.
மேலும், இதுபோல திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விசாரித்ததன் அடிப்படையில் தெளிவாகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
13 Jul 2025
13 Jul 2025