2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இந்தியாவிலிருந்து 41 பேர் திரும்புவர்

Gavitha   / 2016 ஜனவரி 18 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின்  சென்னை மற்றும் மதுரையில் இருந்து 26 பெண்கள் உட்பட 41 அகதிகள், நாளை செவ்வாய்க்கிழமை(19)  இலங்கைக்குத் திரும்பவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

'தி இந்து'வுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர், இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அகதிகள் மீண்டும் விரைவாக இலங்கை திரும்புவதற்கு, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும், இந்திய அரசாங்கத்திடம் இருந்து வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தித் திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகம், இலவச விமான அனுமதிச் சீட்டுக்களை வழங்கியுள்ளது. அத்துடன், குடிபெயர் கொடுப்பனவாக, ஒருவருக்கு 75 அமெரிக்க டொலர்களும் போக்குவரத்துக்காக 19 அமெரிக்க டொலர்களும் உணவற்ற அன்பளிப்பாக 75 அமெரிக்க டொலர்களும்  வழங்கப்படவுள்ளன என்று சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் 1.37 இலட்சம் வீடுகள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இதில் 46ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணித்து வருவதாகவும், இவற்றுள் 43ஆயிரம் வீடுகள், கடந்தாண்டு டிசெம்பரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும்; தெரிவித்துள்ளார்.

மேலும், 2,200 வீடுகள், அடுத்த மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தமது அமைச்சின் மூலம் இரண்டு மாகாணங்களிலும் 65 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் வருடத்தில் 11 ஆயிரம் வீடுகளும், அடுத்த மூன்று வருடங்களில் தலா 18ஆயிரம் வீடுகளும் கட்டப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X