Freelancer / 2025 ஜனவரி 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
விசாரணை எனும் பெயரில் நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கம் பல்வேறு இடங்களிலும் கையெழுத்துப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
இதன் தொடராக இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கமைய யாழ். ஆயர் இல்லத்துக்கு அருகாமையில் இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இந்தக் கையெழுத்துப் போராட்டம் நாளையும் நாளைமறுதினமும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறையில் வாடும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படுகின்ற இந்தப் போராட்டத்தில் அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரையும் கலந்துகொள்ளுமாறு போராளிகள் நலன்புரிச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. (a)
10 minute ago
20 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
25 minute ago
42 minute ago