2025 மே 01, வியாழக்கிழமை

இன்று நள்ளிரவு முதல் விலை கூடும் பொருட்கள்

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தின்பண்டங்கள் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளன.

இந்நிலையில்,  இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் இன்று (28) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளைய தினம் (29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .