Editorial / 2021 மே 28 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை, எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பின்னரும் தொடர்ந்து அமுலில் வைத்திருப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பில், இன்று (28) பிற்பகல் தீர்மானிக்கப்படவுள்ளது.
கொவிட்-19 தொற்றொழிப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவே மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலான முன்னேற்ற அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே, பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் உறுதியான தீர்மானமொன்றை எட்டமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகளை கடந்த 25ஆம் திகதியன்று தற்காலிகமாக தளர்த்தியபோது, மக்கள் நகரங்களில் குவிந்திருந்தமை பேராபத்தை ஏற்படுத்தும். அதுதொடர்பில் கவனத்தை செலுத்துமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
19 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago