2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

இராஜதந்திரிகளை மீள அழைக்க நடவடிக்கை

Simrith   / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசியல் நியமனம் பெற்றவர்களின் பதவிகள் மீள பெறப்படும் என அவர் கூறினார்.

"எம்.பி.க்களின் பல மகன்கள் மற்றும் மகள்களுக்கு இராஜதந்திர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார். 

எவ்வாறாயினும், இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .