2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு நீதியரசர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்றின் நீதியரசர்கள் இருவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதியரசர்களின் நடத்தை காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு நீதியரசர் குற்றச் செயலுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மற்றுமொரு நீதியரசரின் மனைவி ஓர் ஆலோசனை நிறுவனமொன்றை நடாத்தி வருவதாகவும் அதில் குறித்த நீதியரசரின் பங்களிப்பு தொழில்சார் நியதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதியரசர்களின் தொழில்சார் ஒழுக்கவிதிகளை உச்ச அளவில் உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால் குறித்த இருவருக்கு எதிராகவும் அரசாங்கம் குற்றப் பிரேரணை கொண்டு வந்து அவர்களை நீக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X