Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி சனிக்கிழமை பிற்பகல் படகை சிறைபிடித்தனர்.
படகிலிருந்த 7 மீனவர்களை மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மன்னார் நீதிபதி வீட்டில் நேற்று (10) ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 07 பேர்களையும், ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் மீனவ பிரதிநிதி சேசுராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடந்த 50 நாள்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதம், ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 88 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது, ஒகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, ஓகஸ்ட் 19 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
மேலும், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய -இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணவும், கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்ற தர மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (a)
8 minute ago
24 minute ago
26 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
26 minute ago
52 minute ago