Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருண்ட மேகங்களுக்கப்பால் சூரியன் மிளிர்கின்றது என்றும் இருண்ட மேகங்கள் விலகிச் செல்கின்றதென்றும் நாம் நம்புகின்றோம். இருளின் மத்தியில் ஒளிக்கீற்று நிச்சயம் பிரகாசிக்கும் என நாம் நம்புகின்றோம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து, உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
முடிவுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
இலங்கையின் பரந்த பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுது திருப்திகரமான முன்னேற்றத்தை தொடராக இடம்பெறச் செய்கின்றது என சர்வதேச ரீதியாகப் பராட்டப்படுகின்ற இத் தருணத்தில், இலங்கை சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவும், உலகில் முதற் தர சுற்றுலா பயணிகள் அடைவிடமாகவும் சர்வதேச மட்டத்தில் பேர்பெற்றுள்ள தருணத்தில், உலகில் சனநாயக சுட்டிக்கு அமைவாக எமது தேசம் 15 படிகள் முன்னேற்றமடைந்துள்ள இத் தருணத்தில், உலகில் ஊழலுக்கு எதிரான செயன்முறை சிறந்த பாராட்டத்தைப் பெற்றுள்ள இத்தருணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை சமர்ப்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இக்குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் மனித நேயம் தொடர்பான புதியதோர் உணர்வை நாம் தோற்றுவித்துள்ளோம். சமநீதியை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். இனவாதமற்ற நாட்டை நாம் உருவாக்கியுள்ளோம்.
சட்டவாட்சியை வலுபடுத்தி சுயாதீனமாக சட்டவாட்சியை நிலைநாட்டுகின்ற நிறுவனங்களை உருவாக்கி அரசியலிலிருந்து பொலிஸார் உட்பட பாதுகாப்பு படைகளை விடுவித்து புதிய கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றி போதைவஸ்துக்களையும் பாதாள உலகையும் முறியடிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தியுள்ளமை நாம் பெற்ற தனித்துவமான வெற்றியாகும்.
பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி உயர்நிதியியல் ஒழுக்கத்தினை தாபிப்பதன் மூலம் அரசாங்க வருவாயை அதிகரித்துள்ளோம். ஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சி சுற்றுலா வருவாய்களில் அதிகரிப்பு வெளிநாட்டு செலாவணி பண வருகைகளில் அதிகரிப்பு என்பன நாட்டின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தியுள்ளன. துறைமுக செயற்படு இலாபம் அதிகரிப்பு சுங்க வருவாய்கள் அதிகரிப்பு எமது அரசாங்கத்தின் ஒரு ஆண்டு ஐந்தொகை இதற்கு சான்றுபகர்கின்றன.
அதற்கமைய, மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காத அத்துடன் அவ்வபிலாசைகளைக் காட்டிக் கொடுக்காத அரசாங்கத்தின் மீது இந்நாட்டின் பிரசைகள் வலுவான நம்பிக்கையினைக் கொண்டுள்ளன.
இக்கடந்த காலத்தின்போது ஊழலுக்கு எதிராக வலுவான மற்றும் துரிதமான வழிமுறைகளை எடுத்துள்ளதோர் நாடு மக்களின் இறையாண்மையைக் கொண்டு இனவாதத்தை, மதவாதத்தை மற்றும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த நாடாகும். இவ்வரலாற்றில் எந்தவொரு தசாப்தத்திலும் காணப்படாத அளவுக்கு சட்டவாட்சியையும் ஒழுங்கையும் சுயாதீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதோர் நாடு. பொது மக்களின் நிதியங்களை தவறாகப் பயன்படுத்தாத அத்துடன் நிதியியல் ஒழுக்கத்தை நிறுவியுள்ள அரசாங்கமொன்றைக் கொண்டதோர் நாடு. எமது அரசாங்கம் அத்தகையதோர் நாட்டில் வரவு செலவுத்திட்ட அறிக்கையொன்றை சமர்பிக்கும் பணிவான சுய திருப்தியினைக் கொண்டுள்ளது.
அதற்கமைய வரலாற்றிலேயே முதற் தடவையாக பொது மக்கள் நிதியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாத அல்லது முறையற்ற சிறப்புரிமைகளுக்குப் பயன்படுத்தப்படாத அரசாங்கமொன்றின் இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தின் நாட்டின் முன் சமர்ப்பித்துள்ளோம்.
இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நாமும் ஒருபோதும் மறக்க முடியாத வரலாற்றைக் கொண்டிருக்கின்றோம். ஒரு ஆண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வரலாற்று ரீதியான அரசியல் தீர்மானம் ஒன்றுக்கமைவாக நாம் ஆட்சிக்கு வந்தோம். கடந்த காலத்தில் அரசை நாம் ஆண்டு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரமும் உடைமையன்றி அது ஒரு நிருவகித்தலேயாகும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம் எவ்வாறாயினும் மக்கள் மூலம் தற்காலிகமாக வழங்கப்பட்ட அதிகாரம் நிரந்தர அதிகாரமாக மாற்றிக் கொள்ளும் கனவுடைய வரலாற்றின் அரசாங்க முறைமையுடன் கூடிய அனுபவம் எமக்குள்ளது.
வரலாற்றில் ஏனைய அரசாங்கங்களுடனான ஒப்பீடொன்றுகூட அவ் கடந்த ஆண்டின் ஐந்தொகையை புரிந்து கொள்வதற்கு போதுமானது என நம்புகின்றேன்.
இக்காலப்பகுதியின் பிரபல்யமான தீர்மானங்களுக்கு பதிலாக சிறந்த தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம். இக் காலப்பகுதியின் போது நாட்டுக்கென வரவேற்கத்தகாத தீர்மானங்களுக்கு பதிலாக ஆக்கபூர்வமான தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம். அரசியல் வாதிகளின் நிழலின் கீழ் இந்நாட்டின் வரலாற்றில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை நாம் துடைத்தெறிந்துள்ளோம். பயங்கரமான ஊழல் மற்றும் மோசடி மூலம் மறைக்கப்பட்டிருந்த கள்வர்கள் குழுவுடன் கூடிய அரசியல் அதிகாரத்தை தோல்வியடையச் செய்து சட்டத்திற்கு தலை வழங்குகின்ற மற்றும் நாட்டை நேசிக்கின்ற பொறுப்பு மிக்க ஆட்சி முறைமை ஒன்றுக்கு எமது நாட்டை நாம் மாறுதலடையச் செய்துள்ளோம்.
அரசாங்கமொன்று உருவாக்கப்பட்ட முதல் ஆண்டில் இடம்பெறுவதற்கு எதிர்பார்க்கப்படக் கூடாத விடயங்கள் நிகழ்ந்த பழைய வரலாறுகளை நாம் தாண்டிச் சென்றுள்ளோம்.
அதிகாரத்திற்கு வந்து முதல் ஒரு சில மாதங்களுக்குள்ளே தமது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் சிறப்புரிமைகளை வழங்கிய ஆளுகைக் சகாப்தங்களைக்கொண்ட வரலாற்றை நாம் மீட்டிப் பார்க்கின்றோம்.
ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே மத்திய வங்கியை கொள்ளையடித்த காலப்பகுதியை நாம் அனுபவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களுக்குள்ளேயே தமது நண்பர்களுக்கே கோடிக்கணக்கான வரிச் சலுகைகளை வழங்கிய ஆட்சி காலத்தை நாம் அனுபவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களுக்குள் அவர்களுக்கு ஏற்றவிதத்தில் சட்டத்துறையையும் நீதித்துறையையும் அரசியல்மயப்படுத்திய ஆட்சிகளை நாம் கண்டுள்ளோம். ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலப்பகுதியினுள் மருந்துக்குப் பதிலாக நீர் ஊசி மருந்துகளை இந்நாட்டிலுள்ள அப்பாவிப் புற்று நோயாளருக்கு வழங்கிய மெய்சிலிர்க்கும் ஆட்சிகளை நாம் கண்டுள்ளோம்.
பயங்கரமான ஒழுக்கநெறியற்ற அவலட்சணமான முறைமையை நாம் மாற்றியுள்ளோம்.
பிரசைகளுக்கும் பொதுமக்கள் பிரதி நிதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் தீர்க்கமாக மாற்றியமைத்துள்ளோம். அரசியல்வாதிகள் மக்களுக்கு மேலானவர்கள் அவர்களை அடிமைகளாக நடாத்துபவர்கள் அரசர் அல்லது மாண்பு மிக்க தெய்வங்கள் என்ற அந்தஸ்த்தை மாற்றியுள்ளோம். அவர்கள் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளுக்கு தகுதியான ஒருவரல்ல என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் ஒருவராக அவர் இருக்கலாம். எனினும் சாதார மக்களைப் போன்று அவர் சாதாரணமான ஒருவரே என்பதனை இக்குறுகிய காலப்பகுதியினுள் சமூகத்தில் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இது நாம்வென்றெடுத்த சாதனையொன்றாகும். அதனை மேலும் உறுதி செய்வதே எமது இலக்காகும்.
முன்னாள் சனாதிபதிகளின் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளை நாம் அகற்றியுள்ளோம். சிலர் இதை வலியாக உணரலாம் ஆனாலும் நாம் மக்களின் ஆணைக்கு அமைவாகப் பணியாற்றுகின்றோம். வேறு நாடுகளில் முன்னால் சனாதிபதிகளுக்கும் பிரதம அமைச்சர்களுக்கும் வழங்கப்படும் சிறப்புரிமைகள் பற்றி சிலர் வாதிடுகின்றனர் எனினும், அந்நாடுகள் எமது நாட்டைப்போன்று வங்கிரோத்து நிலைக்கு சென்றவையல்ல. எமது நாட்டை துரதிஷ்டவசமாக வங்குரோத்தடையச் செய்தனர். பிள்ளைகள் பாடசாலைகளைக் கொண்டிராத ஒரு நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் ஒருவேளைகூட உணவின்றி உறங்கச் செல்லும் ஒரு நாட்டில், தமது உயிர்களைக் காப்பதற்கு மருந்து வாங்குவதற்கு வழியின்றி மக்கள் வருந்தும் ஒரு நாட்டில், அப்பாவி இளைஞர்கள் தொழிலின்றி வருந்தும் ஒரு நாட்டில் சிறப்புரிமைகளை தொடர்ந்தும் அனுபவிப்பது முன்னால் சனாதிபதிகளுக்கு நெறிமுறையொன்றாக அமையுமா? அதனை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பது சாத்திமா?
ஆயினும், நாம் அந்த உதாரணத்தை நிறுவியுள்ளோம். ஒருநாளைக்கு மூன்றுவேளை உணவு உட்கொள்ளாத மக்கள் மூன்று ஊட்டச்சத்து உணவுகளை பெறக்கூடிய பொருளாதாரமொன்றை உருவாக்குவதும் ஒவ்வொருபிள்ளையும் கல்வியைப் பெறும் சூழலை உருவாக்குவதும் ஒவ்வொருவருக்கும் புகலிடம் வழங்குவதும் ஒவ்வொரு பிரசைக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதும் எமது ஏகக் குறிக்கோளாகும்.
இன்று, நாட்டுக்கு பணியாற்றுவதற்கு விரும்புகின்ற யாருக்கும் வழியொன்றை உருவாக்குவதற்கு எமக்கு இயலுமாக இருக்கின்றது. மிகச் சிறிய இடத்திலிருந்து நாட்டின் உச்சம்வரை உயர்வடைவதற்கான வாயிலை நாம் திறந்துள்ளோம். செல்வம் , அதிகாரம் அல்லது சமூக அந்தஸ்த்துக்குப் பதிலாக ஆற்றல், திறன் மற்றும் இயலுமை என்பவற்றைக் கொண்டவர்களுக்கு அவ்வாயில் திறந்துள்ளது.
வரலாற்றில் தமது நண்பர்களுக்கு அனைத்துச் சிறப்புரிமைகளையும் வழங்குவதற்கு தேவையான அளவு சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் அவர்களுக்கு உதவியவர்களுக்கு உபசரணையளிப்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக்கூட மாற்றுவதன் மூலம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சலுகை வழங்குதல் வரலாற்றை நாம் நிறுத்தியுள்ளோம்.
அத்துடன் வரலாற்றில் பாதாள உலகு மற்றும் போதைப்பொருளில் ஈடுபட்டுள்ள பலர் அரசியல் நிழலின் கீழ் இருந்தனர் . இன்று அவர்கள் அவை அனைத்தையும் இழந்துள்ளனர்.
பல்வேறு பதவிகளுக்கும் நியமனங்களை மேற்கொள்கின்ற போது திறமை, இயலுமை, நேர்மை, நாட்டுக்காக பணியாற்ற விருப்பம் என்பவற்றை நாம் தேடினோமேயன்றி அவர்கள் எமக்கு உதவினார்களா அல்லது எங்களில் ஒருவராக இருந்தார்களா என்பதே அல்ல. அவரது அரசியல் பின்னணி, தேசியம், உறவு, சமயம், கற்ற பாடசாலை, இருந்த நாடு போன்றன எமக்கு தொடர்பற்றவை எம்மிடம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் கிடையாது. எமக்கு தேவைப்பட்டது அனைத்தும் இவர்களின் சேவைகள் நாட்டின் மக்களுக்கு நன்மை பயக்குமா இல்லையா என்பதை அறிந்து கொள்வதே.
நீண்டகாலமாக எமதுநாடு பற்றி முதலீட்டாளர்கள் இருண்ட எண்ணப்பாங்கினைக் கொண்டிருந்தனர்.
அத்தகைய இருண்ட எண்ணப்பாங்கை நாம் மாற்றியுள்ளோம். முதலீட்டாளர் எமக்கு சொத்தொன்றாகும். அவர்களை நாங்கள் நோக்கிய விதத்தையும் எமக்கு இருந்த எண்ணப்பாங்கையும் நாம் மாற்றியுள்ளோம் அவர்கள் எமக்கு உதவவே வருகின்றனர் என்ற எண்ணப்பாங்கை நாம் தோற்றிவித்துள்ளோம். முதலீட்டுக்காக பொருத்தமான சுழலை தோற்றுவித்து அவசியமான வசதிகளை எவ்வித தாமதமுமின்றி அவர்களுக்கு வழங்குவதற்கு அவசியமான சூழலை நாம் உருவாக்குகின்றோம். இலங்கையை முதலீட்டாளர்களுக்கு சாதகமான சொர்க்கபுரியாக மாறுதலடையச்செய்யும் பொருட்டு நாம் சட்டவாட்சி நீண்டகால அரசாங்கக் கொள்கைகள், சுயாதீன நீதித்துறை மற்றும் ஊழல் இல்லாத முதலீட்டு நேயம் மிக்க சுழல் என்பவற்றை ஏற்கனவே உருவாக்கியுள்ளோம். தனிப்பட்ட ஒப்பந்தங்கள், இலஞ்சம், பக்கச்சார்பு என்பவற்றிலிருந்து விடுபட்ட வெளிப்படையான முதலீட்டுச் சூழல், தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் புதிய சட்ட கட்டமைப்புகள், வீசாக் கொள்கைள் மற்றும் முதலீட்டாளர்களால் வேண்டப்படும் வேறு உட்கட்டமைப்பு வசதிகள் விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன் வியாபார வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நோக்கில் வருகின்ற முதலீட்டாளர்களுக்கு வசதியளிப்பதற்கும் ஆக்கபூர்வமான பெறுபேறுகளை அடைவதற்கும் தொடர்பு முகாமையாளர் இணைக்கப்பட்டுள்ளார். இது நேர்மையான அழகான, முதலீட்டாளர்களுக்கு சிநேகமிக்க ஒரு நாடு என்ற செய்தியை நாம் வழங்குகின்றோம்.
இந்நாடு இரண்டுகோடிக்கு மேற்பட்ட பிரசைகள் சுவாசிக்கும் இல்லமாகும். அத்துடன் இந்நாடு பல தலைமுறையினர் வாழவுள்ள நாடுமாகும். நாம் நாகரீகமடைந்த நாடொன்றை உருவாக்குகின்றோம். விலங்குகளைக் கூட நேசிக்கும் ஒரு நாடு. மனிதாபிமானம் நிறைந்ததொரு நாடு.
ஒரு நாட்டின் கல்வி அந்நாட்டைக் கட்டியெழுப்புவதில் எவ்வளவு விசேடம் மிக்கதென்பதை நாம் ஆழமாக அறிவோம். அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியை வழங்கும் நிலைபேறான கொள்கையை நாம் ஆழமாக அறிவோம்.
பல தசாப்தங்களாக பாதுகாப்பற்ற, சிக்கலான, அழுத்தம் மிகுந்த வரலாற்றுக் கதையினை முடிவுறுத்தும் ஏக உரிமையை இந் நாட்டு மக்கள் எனக்கு பொறுப்புத் தந்துள்ளனர். நாம் அந்த பாரிய மற்றும் தனித்துவமான மக்கள் ஆணையை மிகவும் பணிவுடனும் பொறுப்புடனும் நாட்டை கட்டியெழுப்பும் உயரிய பணிக்காக பயன்படுத்தியுள்ளோம். ஊழலுக்கு எதிராக செயற்படுதல், தேசிய ஒற்றுமையை நோக்கி பயணித்தல், சட்டத்தை அனைவருக்கும் சமமாக பிரயோகித்தல் ஆகிய உன்னத செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் எவ்வளவு கடினமாக இருப்பினும் நாம் அந்த கடுமையான பணியினை திட உறுதியுடன் முன்னெடுப்போம்.
ஒவ்வொரு இலங்கையரும் நல்வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற எனது நோக்கினை அடைவதற்கான பாதை மற்றும் கனவினை நனவாக்குவதற்காக தூய எதிர் பார்ப்புடன் இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.
மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வதற்கு மன அமைதியும், செய்ய முடியுமானவற்றை செய்வதற்கான தைரியமும், செய்த மாற்றங்களை அறிந்து கொள்வதற்கான ஞானமும் அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற கூற்றொன்றும் உள்ளது. நாம் அந்த யதார்த்தத்தை விளங்கியுள்ள ஓர் அரசாங்கமாகும்.
வரலாறு முழுவதும் மக்களின் இடுப்புப் பட்டியினை இறுக்கி அரசியல் வாதிகளுக்கான பட்டியினை தளர்வடையச் செய்யும் உதாரணங்களை அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது எனில் மக்களின் இடுப்புப் பட்டியை தளர்வடையச் செய்து அரசியல் வாதிகளுக்கான பட்டி இறுக்கமடையச் செய்யும் உதாரணமொன்று இடம் பெற்றுள்ளது. எமக்குத் தேவை, பாரிய அரசாங்கமொன்றல்ல ஆனால் மிகவும் உற்பத்தித்திறன் மிக்க அரசாங்கமொன்றே.
ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டம் என்பது வெறுமனே தேசமென்ற வகையில் நாம் உழைப்பதை, நாம் செலவிடுவதை, நாம் கடன்பெறுவதை அளவிடுகின்ற கணக்கீட்டுச் செயன்முறை ஒன்றல்ல. இது வெறுமனே ஆவணமொன்றல்ல. இது அரசிறை நிலைபெறுதன்மையை சமநிலைப்படுத்துகின்ற அதே வேளை எமது அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அவசியமாகவுள்ள கடினமான மற்றும் வெளிப்படையான விட்டுக்கொடுப்பனவுகளின் பிரதிபலிப்பொன்றாகும். சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் வரவுசெலவுத்திட்டமென்பது அனைத்துப் பிரசைகளினதும் உரிமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியியல் வளங்கள் ஒதுக்கீடு செய்யுமொன்றாகும். அதற்கமைய அது ஒருநாட்டின் எதிர்காலம் பற்றிய ஒருமித்த கருத்தாகும்.
நாடு என்ற வகையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தெளிவானவை. முன்னுரிமைகளும் தெளிவானவை. இனிமேலும் நோயை கண்டறிவது அவசியமானதென நாம் நம்பவில்லை. பல காலமாக நோய்பற்றியும் அடிப்படைக் காரணம் பற்றியும் நாம் புரிந்து கொண்டுள்ளோம். நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் நாம் தடம் பதிக்கின்றோம். இது சவால் மிக்கது அச்சவால்களை நாம் அனைவரும் ஒன்றினணந்து வெற்றி கொள்ளலாம் என்று நாம் நம்புகின்றோம்.
குறிப்பாக எமது நாட்டில் துரதிஷ்ட வசமாக எமது நாட்டுக்கு வெளியில் சென்ற பல ஆற்றல் படைத்தோர் பலர் காணப்படுகின்றனர். ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு அவர்கள் தலைகுனியாமை காரணமாக சிலர் நாட்டை விட்டுச் சென்றனர். அல்லது நாட்டிலுருந்து அவ்வாறான உண்ணத மிக்கவர்களை ஆட்சியாளர்கள் வெளியேற்றினர். இந்நாட்டின் கல்வி கற்றவர்கள், இந்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் கல்வி கற்றவர்கள் உலகில் மிகச் சிறந்த வாய்ப்புகளைக் கொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் அவ்வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாது அவர்களது தாய்நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு வந்தனர்.
எனினும் அவர்கள் பிறந்த நாட்டின் மண்ணில் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு அல்லது அம்மண்ணுக்கு சேவையாற்றுவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தவறிழைக்கின்ற ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தலை குனியத் தெரியாமலிருந்ததே அவர்களின் தவறாகவிருந்தது. அத்துடன், சரியான ஆட்களுக்கு சரியான இடம் வழங்கப்படாத முறைமையுடன் அவர்கள் ஒத்துப்போகவில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் இன்று அழைப்பு விடுக்கின்றோம் அவர்களுக்காக இந்நாடு தடைசெய்யப்பட்டிருந்த காலம் முடிவடைந்துவிட்டது பழைய நிலைமை முடிவுக்கு வந்தது. சரியான ஆளுக்கு சரியான இடத்தை வழங்குகின்ற முறைமையொன்று தற்போது காணப்படுகின்றது. சுதந்திரமாக வந்து சுதந்திரமாகப் பணியாற்றுங்கள், இந் நாட்டின் கதவு உங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
எமக்கு உரித்தான அனைத்தையும் பெறுவதற்கு இயலுமையும் வாய்ப்புக்களையும் நாம் தோற்றுவித்தால் மாத்திரம் அவை எம்மை வந்தடையும் என இரவிந்திரனாத் தாகூர் குறிப்பிடுகின்றார்.
இவ்வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழித்து அபிவிருத்தியைத் தூண்டி, நம்பிக்கையை மீள் அமைத்து புதியதோர் வாழ்வைத் தொடங்குவதன் மூலம் மறுமலர்ச்சியை உருவாக்குவதாகும்.
எதிர்க்கட்சியிடம் நாம் கண்ணியமாகக் கூறுகின்றோம். எங்களை விமர்சியுங்கள், எங்களை குற்றம் சுமத்துங்கள். எதிர்ப்புத்தெரிவியுங்கள் ஆனால் குறைந்தது எதிர்கால தலை முறையினர்களுக்காக போதைப் பொருள் கடத்தலை பாதாள உலகை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாம் போராட்டுகின்ற போது, மற்றும் வறுமையை ஒழிப்பதை நோக்கி நாம் பணியாற்றுகின்ற போது அதற்கு முழு மனதுடன் ஆதரவளியுங்கள். குறைந்தது அப்போராட்டத்தில் எதிர்க்கட்சியிலிருந்து நாடு எதிர்பார்ப்பது அதுவே,
வரலாற்றின் வழிமிகுந்த நிகழ்வுகள் இந்நாட்டைக் கட்டியெழுப்புமாறு எமக்கு கூறுகின்றன. கடந்த காலத்தில் முழுமையான இழப்புகளும் புறக்கணிப்பும் ஒடுக்குதலும் அச்சுறுத்தல்களும் கர்ச்சிப்புக்களும் இந்நாட்டை கட்டியெழுப்புவதற்கே எமக்கு கூறுகின்றன.
கடந்தகாலப் பிள்ளைகளின் தலைமுறை உண்மையான பெருமையுடன் கூடிய அவர்களின் தாய்நாடான இந்நாடுபற்றி பேசமுடியாமலிருக்கும் ஆனாலும், எதிர்கால தலைமுறை அத்தகைய சோகத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்.
மிகவும் அழகான நாடொன்றுக்காக ஒவ்வொரு கனவையும் தியாகம் செய்து அவ்வழகிய நாடு பிறப்பதற்கு முன்னரே மரணித்த ஒவ்வொரு இதயமும் இந்நாடு அழகான நாடொன்றாக தோற்றம் பெறுவதைக் காணும் கனவைக் கொண்டிருந்தது.
அத்தகைய தூய்மையான மக்களின் இறக்கின்ற விருப்பங்களை நாமாக பொறுப்பேற்றுள்ளோம். கடவுளின் வாசகமாக மிகவும் விருப்பத்துடன் அவ்வெண்ணங்களை நாம் நிறைவு செய்கின்றோம்.
இருண்ட மேகங்களுக்கப்பால் சூரியன் மிளிர்கின்றது என்றும் இருண்ட மேகங்கள் விலகிச் செல்கின்றதென்றும் நாம் நம்புகின்றோம். இருளின் மத்தியில் ஒளிக்கீற்று நிச்சயம் பிரகாசிக்கும் என நாம் நம்புகின்றோம்.
எமது பயணத்தில் நாம் செல்கின்றோம் என்று ஞாபகப்படுத்துகின்றோம், எதிரிகளின் வெறித்தனமான குரள்களை நாம் செவிமடுக்க மாட்டோம். இந் நாட்டின் பிரசைகளின் தீர்க்கமான மற்றும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்புகளை மாத்திரம் நாம் அவதானிப்போம்.
பொருளாதார ரீதியாக சுபீட்சம் மிக்கது மாத்திரமன்றி நெறிமுறை சார்ந்து பெருமைமிக்க, உலகளவில் மதிக்கப்படுகின்ற பரந்த மனிதாபிமான பண்புகளைக் கொண்ட தேசமொன்றை நாம் கட்டியெழுப்புவோம்.
இத்தனித்துவம் மிக்க பயணத்தின் பிரசைகள் என்ற வகையில் நீங்கள் முக்கிய பங்காற்றுவீர்கள். இம்மாறுதலின் பின்னால் உள்ள சக்தியும் காரணமும் நீங்களே. நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அயராது பணியாற்றிய அரசாங்க ஊழியர்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் ஆகியோருக்கு நாம் நன்றி கூறுகின்றோம். வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் திரும்பி வந்து, முதலிட்டு நாம் அனைவரும் நேசிக்கின்ற எமது தாய்நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் கைகோர்க்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
இறுதியாக இவ்வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதை தளராத அர்ப்பணிப்புடனும் விடா முயற்சியுடனும் பணியாற்றிய நிதி அமைச்சின் அனைத்து அலுவலர்களுக்கும் திறைசேரிக்கான செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கின்றேன். அவர்களது தொழில்சார் பண்பு, அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வு என்பன இவ்வனைத்தையும் உள்ளடக்கி முன்னோக்கி நோக்குகின்ற வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதில் ஏதுவாக அமைந்தது. அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலையும் தேசிய அபிவிருத்தி இலக்குகளையும் நாம் கூட்டாக முன்னேற்றமடையச் செய்வதனால் இம் முன்மொழிவுகளை உரிய காலத்திலும் காத்திரமான விதத்திலும் உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு நிதி அமைச்சின் அலுவலர்கள் என்ற ரீதியில் உங்களது தொடர்ச்சியான ஆதரவையும் கடமைப் பொறுப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago