Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 20 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவச் சேவையிலிருந்து இடைவிலகிய அனைத்து இராணுவத்தினரும் இராணுவச் சேவையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக்கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், இம்மாதம் 22ஆம் திகதி முதல் மே மாதம் 10ஆம் திகதி வரை, நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தப் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கமைய, பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாலேயே, இந்த பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சேவையில் இருந்து விலகுவதற்கான இப்புதியத் திட்டத்தின் கீழ், இடைவிலகியவர்கள் நேரடியாக தங்களது படையணித் தலைமையகத்துக்குச் சென்று அல்லது தொடர்புகொண்டு குறிப்பிட்ட பொதுமன்னிப்பு காலத்துக்குள் பதவி விலகலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 6 மாதங்களுக்கு மேலாக, சேவையை விட்டு விலகியவர்கள் மறுபடியும் இராணுவத்தில் இணைய வேண்டுகோள் விடுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களை மீள் இணைப்பது சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .