Freelancer / 2025 மார்ச் 02 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீனவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் சிறையுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் முக்கிய கட்சி பிரமுகர்கள், மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (a)

1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago