Freelancer / 2022 மார்ச் 13 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
அமைச்சுப் பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை ஓர் அரசியல் நாடகம் என்று தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், கம்மன்பில, விமல் போன்ற இனவாதிகளை வைத்துகொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியாது என்று தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிபிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமை ஓர் அரசியல் நாடகம். இவர்கள் அனைவரும் இனைந்து மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். ஆகையால் நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு இவர்களும் மக்களுக்கு பதில் கூற வேண்டும்.
மக்கள் இன்று கோருவது எல்லாம் சஜித்பிரமேதாஸவை மாத்திரமே. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபாய் மானிய விலையில் 15 கிலோ கோதுமைமா வழங்கும் வேலைத்திட்டம் என்பது சாத்தியமில்லை.
நாட்டு மக்கள் இந்த அரசாங்கம் மீது வெறுப்பாகவே உள்ளார்கள். வெகுசீக்கிரம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பினால் இந்த நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும்.
மலையக மக்களுக்கு பொன்னான காலம் என்பது நல்லாட்சி அரசாங்கத்தில் மாத்திரமே இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம். மீண்டும் மலையக மக்களுக்கு பொன்னான காலம் வரவேண்டும் என்றால் சஜித் பிரேமேதாஸவின் அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்களிடம் சென்று ஆயிரம் ருபாய் வழங்குமாறு மண்டியிட்டுக் கோர முடியாது.
காலி, மாத்தறை பகுதியிலுள்ள தொழிலாளர்கள் எவ்வாறு சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளார்களோ, அதேபோல் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்பட வேண்டும்“ என்றார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026